கொழும்பு தேசிய வைத்தியசாலை, களுபோவில வைத்தியசாலை மற்றும் மஹரகம பற்றுநோய் வைத்தியசாலையில் இலவச உணவு திட்டத்தை முன்னெடுத்த வந்த ஜனபோஸ நிதியம், அதன் செயற்பாடுகளை இன்று முதல் நிறுத்தியுள்ளது.
இது தொடர்பில் குறித்த நிதியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், தமது அமைப்பின் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்;டு வரும் குற்றச்சாட்டுகள் மற்றும் தமது பணியாளர்கள் இனவன்முறைகளுக்கு உள்ளாகிவிடக்கூடாது என்ற அக்கறை என்பனவே தமது சேவையை நிறுத்துவதற்கான காரணம் என்றும் நிதியம் குறிப்பிட்டுள்ளது.
2012ஆம் ஆண்டு இந்த நிதியம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இலவச உணவுத்திட்டத்தை மேற்கொண்டு வந்தது.
2016-17ஆம் ஆண்டுகளில் நிதியம், களுபோவில மற்றும் மஹரகம ஆகிய வைத்தியசாலைகளுக்கு சேவையை விஸ்தரித்தது.
இந்தநிலையில் குறித்த காலப்பகுதிக்குள் இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் இருந்து வந்த 5 இலட்சம் பேர் வரை தமது சேவையால் நன்மையடைந்ததாக ஜனபோஸ நிதியம் தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க