போதைவஸ்து தொடர்பிலான குற்றச்சாட்டுகளின்பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 13பேருக்கு மரண தண்டனை விதிக்கும் யோசனையை கைவிடவேண்டும் என்று சர்வதேச மன்னிப்புசபை இலங்கையின் ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.
இந்த 13பேரையும் தூக்கிலிடும் முனைப்புக்கள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
இந்த தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டால் அது 1976ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் தடவையாக நிறைவேற்றப்படும் தூக்குத்தண்டனையாக இருக்கும்.
இந்த செய்தி தொடர்பில் உத்தியோகபூர்வ அறிக்கைகள் எவையும் வெளியிடப்படவில்லை.
எனினும் புதிதாக பணிக்கு சேர்த்துக்கொள்ளப்பட்ட அலுகோசுவுக்கு பயிற்சிகள் வழங்கப்படுவதாக சர்வதேச மன்னிப்புசபை சுட்டிக்காட்டியுள்ளது.
இவர்கள் தூக்கிலிடப்பட்டால் அது சட்டத்துக்கு புறம்பானதாகும்.
அத்துடன் சர்வதேச மனித உரிமை சட்டத்துக்கும் எதிரானதாகும் என்று மன்னிப்பு சபை குறிப்பிட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க