தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் அமலாபால். இவரது திருமண வாழ்க்கையில் சர்ச்சையை கிளப்பிய பெயரை கெடுத்துக் கொண்ட பின் மீண்டும் சினிமாவில் ஆர்வம் காட்டி வருகிறார்.
பெரிய அளவு இவருக்கு யாருமே படவாய்ப்புகள் தராத நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் ஆடை படத்தில் ஆடை இல்லாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
மேலும் சமீபத்தில் ஒரு பாடகருடன் லிவிங் டுகெதர் உறவில் வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளிவந்தன. அதே நபரை திருமணம் செய்து கொண்டதாகவும் புகைப்படங்கள் வெளியானது. ஆனால் எதையுமே ஒத்துக்கொள்ள மறுக்கிறார் அமலாபால்.
இதனாலேயே அடிக்கடி சமூக வலைதளங்களில் மிகவும் தரங்கெட்ட விமர்சனங்களுக்கு உள்ளாகிறார். சமீபத்தில் காசு தேவைப்பட்ட நிலையில் அப்பா வயது நடிகருடன் ஜோடி போட முடிவு எடுத்துள்ளார் அமலாபால்.
தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வருபவர் பாலகிருஷ்ணா. தாத்தா வயதாகியும் இன்னும் ஹீரோவாக நடித்து வருகிறார். படங்கள் எதுவுமே ஹிட் அடிக்கவில்லை என்றாலும் நான் நடித்துக் கொண்டே தான் இருப்பேன் என அடம்பிடிக்கிறார்.
அந்த வகையில் தற்போது அவர் நடித்து வரும் புதிய படம் ஒன்றில் அவருக்கு ஜோடியாக அமலாபால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இதற்காக இரண்டு கோடி ரூபாய் சம்பளம் பேசி உள்ளாராம். எல்லாம் பணம் படுத்தும் பாடு என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுத்து வருகின்றனர்.
கருத்து தெரிவிக்க