உலகம்

கொரோனாவை பரப்பி உலக பேரழிவை ஏற்படுத்திவிட்டது சீனா : ட்ரம்ப் குற்றச்சாட்டு

கொரோனா வைரஸ் தொற்றினை பரப்பி அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, உலக நாடுகளுக்கு மிகப்பெரும் பேரழிவை சீனா ஏற்படுத்தி விட்டது என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவில் இதுவரை கொரோனா தொற்றால் 1 இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதோடு, பல இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் , கொரோனா என்ற கொடிய வைரஸை பரப்பி அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, உலகில் 185 நாடுகளில் மிகப் பெரும் பேரழிவை சீனா ஏற்படுத்தி விட்டது. இது போன்ற ஒரு கொடிய வைரஸை உலகம் முழுவதும் பரப்ப சீனா அனுமதித்திருக்கக் கூடாது. அத்துடன் வைரஸை பரப்பியதன் இரகசியத்தை மூடி மறைக்கிறது. உலக பேரழிவிற்கு காரணமான சீனா இதற்கு முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க