இலங்கைக்கான சுற்றுலா அறிவுறுத்தலை தளர்த்தியுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான பயணம் தொடர்பில் இதுவரையில் மீள்பரிசீலனை செய்யுமாறு வழங்கப்பட்ட மூன்றாம் நிலை அறிவுறுத்தலில் இருந்து முன்னெச்சரிக்கையுடன் பயணிக்குமாறு இரண்டாம் நிலை அறிவுறுத்தலை அமெரிக்கா இன்று விடுத்துள்ளது.
பயங்கரவாத சூழ்நிலைகளால் இலங்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் பயங்கரவாதிகள் சிறியளவில் அல்லது எச்சரிக்கையுடன் தாக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் சுற்றுலா தலங்கள் , போக்குவரத்து மையங்கள், சந்தைகள், வணிக வளாகங்கள், உணவகங்கள், வழிபாட்டுத் தலங்கள், பூங்காக்கள், முக்கிய விளையாட்டு மற்றும் கலாசார நிகழ்வுகள், கல்வி நிறுவனங்கள், விமான நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் இலங்கையின் பிற பொதுப் பகுதிகளில் தாக்குதலுக்கு இலக்கு வைக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பாதுகாப்பு சூழல் காரணமாக இலங்கையில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு அவசரகால சேவைகளை வழங்க மட்டுப்படுத்தப்பட்ட செயல்திறனை அமெரிக்கா கொண்டிருப்பதாக மேலும் குறிப்பிட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க