ஈரான் மீதான பொருளாதார தடையை மீறியதாக சீனத் தொலைத் தொடர்பு நிறுவனமாகிய ஹூவாய் மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கனடாவில் உள்ள வான்கூவர் நகரில் வைத்து , ஹூவாயின் தலைமை நிதித்துறை அதிகாரி மெங் வான்ஸு கைது செய்யப்பட்டார். வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள அவரை விசாரணைக்காக அமெரிக்காவுக்கு நாடு கடத்த திட்டமிட்டது. இந்நிலையில் அவரை நாடு கடத்துவதை கைவிடுமாறு மெங் வான்ஸுவின் வழக்கறிஞர்கள் கனடாவின் நீதித்துறை அமைச்சர் டேவிட் லேமெட்டுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில் மெங் வான்ஸுவை நாடு கடத்தும் திட்டத்தை நிறுத்தும் படியும் , அது கனடாவின் நலன்களுக்கு நன்மையளிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள கனடாவின் நீதித்துறை, சட்டத்தின் விதிமுறைகளுக்கு ஏற்பவே தாங்கள் செயற்படுவதாக தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க