அழகு / ஆரோக்கியம்

வறண்ட சருமத்தை பொலிவாக்குவது எப்படி..?

சிலருக்கு சருமத்தில் காய்வும் வெடிப்புகளும் காணப்படும். இதற்கு முக்கிய காரணம் தோலில் உள்ள வறட்சி தன்மை . இதனை தடுப்பதற்கு அதிகளவு தண்ணீரைப் பருக வேண்டும். அத்துடன் சில எளிய இயற்கை வழிகளை கடைப்பிடித்தால் வறட்சியைப் போக்கலாம்.

கோப்பிக் கொட்டைகளை வெயிலில் காய வைத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு தேக்கரண்டி தூளில் சிறிதளவு நீர் கலந்து முகத்தில் பூசி கீழிருந்து மேலாக மசாஜ் செய்யவும். 10 நிமிடங்கள் காய வைத்த பின் குளிர்ந்த நீரால் கழுவி விடவும்.

ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் எடுத்து அதில் ஒரு தேக்கரண்டி சீனியும் எலுமிச்சைச் சாறு 4 அல்லது 5 துளிகள் விட்டு கலக்கவும். முகத்தை கழுவி துடைத்த பின் இந்த கலவையை முகத்தில் பூசி 10 நிமிடங்கள் காய வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவி விடவும். தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக பாதாம் எண்ணெயையோ ஒலிவ் எண்ணெயையோ பயன்படுத்தலாம். இந்த கலவை தோலில் உள்ள துளைகளை மூடி முகத்தைப் பொலிவாக்கும்.

தோல் நீக்கிய அப்பிளில் சிறு துண்டை எடுத்து நன்றாக மசித்து , அதனுடன் சிறிதளவு தேன் , ஓட்ஸ் பவுடர் சிறிதளவு கலந்து அதனை முகத்தில் பூசி அரை மணித்தியாலத்தின் பின் முகத்தைக் கழுவவும். உங்கள் வறண்ட சருமம் காணாமல் போய் உங்கள் முகம் பளபளப்பாகும்.

கருத்து தெரிவிக்க