தமிழகத்தில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகள் இந்திய குடியுரிமை கோரி மாவட்ட ஆட்சியர் மூலம் விண்ணப்பிக்க முடியும் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது.
அவ்வாறு செய்யப்படும் விண்ணப்பங்களை விரைந்து பரிசீலித்து அவர்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற கிளை மேலும் உத்தரவிட்டுள்ளது.
தமிழ் நாட்டில் உள்ள இலங்கை அகதிகள் தமக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என கோரிகை விடுத்த நிலையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இராமேஸ்வரம் ஏதிலிகள் முகாமில் உள்ள இலங்கை அகதிகள் விருதுநகரில் உள்ள மாவட்ட ஆட்சியாளரிடம் குடியுரிமை வழங்குமாறு கோரிக்கையினை முன்வைத்தனர்.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தினால் 1990 பகுதிகளில் இந்தியாவில் தஞ்சமடைந்த அகதிகள் தமிழ்நாட்டில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மீண்டும் நாடு திரும்பவில்லை எனவும் இந்தியர்களை போல வாழ சகல உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் எனவும் இம்மக்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்து தெரிவிக்க