சினிமா

மாஸ்டர் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் திரைப்படம் மாஸ்டர். அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படத்தை லலித்குமார் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார்.

ஏப்ரல் 9ம் தேதி வெளியாக வேண்டிய திரைப்படம் தற்போது நிலவிவரும் சிக்கலான சூழ்நிலையால் படத்தின் வெளியீட்டுத்தேதியை முடிவுசெய்ய முடியாமல் படக்குழுவினர் தடுமாறி வருகின்றனர்.

பாடல் வெளியீட்டுடன் படத்தின் கொண்டாட்டத்தை நிறுத்திவிட்டனர். சமீபத்தில் வந்த விஜய்யின் பிறந்த நாளுக்குக் கூட படத்தின் எந்த ஒரு அப்டேட்டும் விடாமல் ரசிகர்களை ஏமாற்றினர்.

இந்நிலையில் மாஸ்டர் படத்தை கண்டிப்பாக தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டிருப்பதாக பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி தனது யூட்யூப் தளத்தில் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் ட்ரெய்லர் ரிலீஸ் தேதியையும் குறிப்பிட்டுள்ளார்.

தீபாவளிக்கு படம் முடிவானதால் ஆயுதபூஜைக்கு மாஸ்டர் படத்தின் டிரைலரை கோலாகலமாக வெளியிட படக்குழுவினர் தயாராகி விட்டார்கள். இதனால் தற்போது மாஸ்டர் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.

கருத்து தெரிவிக்க