இலங்கை

அனில் ஜாசிங்க வலியுறுத்தியுள்ள கோரிக்கை!

பாடசாலை மாணவர்கள் தினமும் 06 மணித்தியாலங்கள் முகக் கவசம் அணிந்தால் வேறு நோய்த் தொற்றுக்கள் ஏற்படலாமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் எதிர்வரும் 06 ஆம் திகதி பாடசாலைகள் மீளவும் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமானதா என அனில் ஜாசிங்கவிடம் செய்தியாளர்கள் வினவிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், சுகாதார அமைச்சினால் கல்வி அமைச்சிற்கு வழங்கப்பட்ட சுகாதார விதிமுறைகள் அடங்கிய சுற்றறிக்கையில் இந்த விடயம் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும் போதும் வெளியேறும் போதும் முகக்கவசம் அணிவது கட்டாயம். பாடசாலை மாணவர்கள் 06 மணித்தியாலங்கள் தொடர்ந்து முகக் கவசம் அணிந்தால் வேறு நோய்த் தொற்று ஏற்படக்கூடும்.

இதனால் பாடசாலை மாணவர்கள் தங்களுடைய முகக்கவசத்தை பாடசாலைக்கு வந்த பின்னர் நீக்கி பாதுகாப்பாக வைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க