வெளிநாட்டு செய்திகள்

கம்போடிய கட்டிடம் இடிந்து விழுந்ததில் 13 பேர் உயிரிழப்பு

கம்போடியாவில் அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிஹானவ்க்வில் என்ற கடற்கரையோர பகுதியில் சீன நிறுவனம் அமைக்கும் 7 மாடிகளை கொண்ட கட்டிடத்திலேயே நேற்று அதிகாலை கட்டுமானப்பணி நடந்து கொண்டிருந்தபோது, இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இதில் மேலும் 23 பேர் படுகாயமனடைந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து மீட்பு பணி முடுக்கி விடப்பட்டது. இடிபாடுகளில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 23 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர் என மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பலர் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கி இருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க