இலங்கையில் 43 வருடங்களுக்கு பின்னர் முதலாவது மரணத் தண்டனை விரைவில் நிறைவேற்றப்படும் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
சர்வதேச ராஜதந்திரிகள் மற்றும் மனித உரிமை நடவடிக்கையாளர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த முன்னெடுப்பை இலங்கை ஜனாதிபதி மேற்கொள்ளவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் அடுத்த வாரத்தில் இது இடம்பெறுவதற்கான சாத்தியங்கள் இல்லை என்று ஜனாதிபதி செயலகத் தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
போதைவஸ்து குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவருக்கே இந்த தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.
இந்த செய்தியை நீதியமைச்சர் தலத்தா அத்துகோரளை மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளா டி.எம்.ஜே.டல்யூ தென்னக்கோன் ஆகியோரிடம் இருந்து உறுதிப்படுத்திக்கொள்ள முடியவில்லை.
மரண தண்டனை நிறைவேற்றம் தொடர்பான திகதி தீர்மானிக்கப்பட்டு விட்டதாக ஜனாதிபதி சிறிசேன ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இதனையடுத்து 2018ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மரண தண்டனை தொடர்பான தீர்மானத்துக்கு ஆதரவாக இலங்கை வாக்களித்துள்ளமையை சர்வதேச அமைப்புக்கள் சுட்டிக்காட்டியிருந்தன.
அத்துடன் இலங்கை தற்போது அனுபவிக்கும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பிலான எச்சரிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் விடுத்திருந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க