உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

மத்திய மாகாண நகரங்களை பூ மரங்களினால் அலங்கரிக்க திட்டம்

மத்தியமாகாணத்தில் காணப்படும் நகரங்கள் முழுவதையும் பூமரங்களால் அலங்கரிக்க மத்திய மாகாண ஆளுனர் மைத்ரி குணரத்ன திட்டமிட்டுள்ளார்.

“பிவிதுறு ஹரித நகர” வேலைத்திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இவ்வேலைத்திட்டம் முதல் கட்டமாக கண்டி குண்டசாலை நகரத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பூமரங்களை மத்திய மாகாண நகரங்கள் முழுவதும் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின் போது உரையாற்றிய மத்தியமாகாண ஆளுனர் மைத்திரி குணரத்ன ,

மத்தியமாகணத்தில் காணப்படும் நகரங்களை பசுமை நகரங்களாக மாற்றுவதே இவ்வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.

கட்டிடங்கள் நகரத்தில் அதிகரித்துள்ளதால் மனிதர்களுக்கு சுவாசிப்பதில் எதிர்காலத்தில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.  அவ்வாறான பிரச்சனைகளை குறைக்கவே இவ்வாறான வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.

இவ்வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பாதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஆளுனர் குறிப்பிட்டதோடு மத்தியமாகாணத்தை எதிர்காலத்தில் பசுமையான பகுதியாக மாற்ற மேலும் பல வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த உள்ளதாக குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க