பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு அமைச்சர் மற்றும் முன்னாள் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர்கள் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் சாட்சியம் அளிப்பதற்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்கள் நேற்று விசேட சந்திப்பை மேற்கொண்ட நிலையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மே 29 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளில் இது வரையில் பொலிஸ் மா அதிபர், தொளஹீத் ஜமாத் அமைப்பின் பொது செயலாளர்,மற்றும் கிழக்கு மாகாணத்தில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகள் உட்பட பல முக்கியஸ்தர்கள் சாட்சியமளித்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக மேற்படி தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க