குறித்ததொரு இனத்துக்காக தனியான செயலகம் அமைப்பது தொடர்பில் பல கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவாதத்தின்போது கருத்துத் தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கல்முனையில் முன்னெடுக்கப்படும் சாகும் வரையான உண்ணாவிரம் என்ற கோரிக்கையால் தான் அங்கு குழப்ப சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது அப்பிரதேசத்தில் இன்னுமொரு குழப்பத்துக்கு வழிவகுக்கும் என்ற சந்தேகம் தோன்றியுள்ளது எனவும் அவர் கூறினார்.
குறித்த உப பிரதேச செயலகம் தொடர்பில், ஆராய்வதற்கு அரசாங்கம் குழுவொன்றை அமைத்துள்ளது. இதன் மூலம், எல்லா சமூகத்திற்கும் நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டில் நாங்களும் இருக்கின்றோம் எனவும் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க