வெளிநாட்டு செய்திகள்

பாகிஸ்தானுக்கு சர்வதேச அமைப்பு எச்சரிக்கை

பயங்கரவாதத்திற்கு நிதி கிடப்பதை தடுப்பதில் பாகிஸ்தான் தோல்வி அடைந்து விட்டதாக சட்டவிரோத பணப்பரிமாற்ற கண்காணிப்புக் குழு (எப்.ஏ.டி.எப். ) குற்றம் சுமத்தியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நேற்று இடம்பெற்ற குறித்த குழுவின் கூட்டத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்திற்கும் நிதி கிடைப்பதையும் சட்ட விரோத பணப்பரிவர்த்தனைகளையும் தடுப்பதில் முன்னரே அளித்த வாக்குறுதிகளை, எதிர் வரும் அக்டோபருக்குள் பாகிஸ்தான் நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் கருப்புப் பட்டியலில் அந்நாடு சேர்க்கப்படும் என்று எப்.ஏ.டி.எப் எச்சரித்துள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பரிஸை தலைமையிடமாக கொண்டுள்ள எப்.ஏ.டி.எப் அமைப்பு பயங்கரவாதத்துக்கான நிதி உதவியை தடுத்தல் மற்றும் சட்ட விரோத பணப் பரிவர்த்தனைகளை கண்காணிக்கிறது.

பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்களுக்கு நிதி உதவியை தடுப்பதில்லை எனவும் சர்வதேச பயங்கரவாதிகளை சுதந்திரமாக தனது மண்ணில் உலவ விடுவதாகவும் இந்தியா உட்பட உலக நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.

கருத்து தெரிவிக்க