கிழக்கு செய்திகள்

வவுணதீவில் போதைப்பொருள் விழிப்பூட்டல் நிகழ்வு

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள விளாவட்டவான் கிராமத்தில் சமுர்த்தி சமுதாய அமைப்பின் ஏற்பாட்டில் போதைப் பொருள் பாவனைத் தடுப்பு தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வு இன்று நடைபெற்றது.

சர்வதேச புகைத்தல் மற்றும் மது பாவனை எதிர்ப்பு தினத்தையொட்டி விளாவட்டவான் கிராமத்திலுள்ள சமுர்த்தி சமுதாய அமைப்புக்கள் இணைந்து இச்செயற்பாட்டினை முன்னெடுத்தன.

போதைப் பொருள் பாவனை வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு எனும் தொனிப் பொருளில் அதன் பாதிப்புக்கள் பற்றி நிகழ்வில் தெளிவுப்படுத்தப்பட்டது.

இதன் போது போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்பு தொடர்பில் எழுதப்பட்ட பதாதைகளுடன், கரவெட்டி பிரதான வீதி வழியாக விளாவட்டவான் மாரியம்மன் ஆலய முன்றலை மக்கள் வந்தடைந்துடன் விழிப்புணர்வு நிகழ்விலும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில், சமுர்த்தி சமுக அபிவிருத்தி உத்தியோகத்தர் வே.பரஞ்சோதிநாதன், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் வை.லோகேஸ்வரன், பொது சுகாதார பரிசோதகர் ந.விஜயமேனன், மாதர் அபிவிருத்தி சங்கத்தினர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

கருத்து தெரிவிக்க