முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றால் மீண்டும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
லலித் மற்றும் குகன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆள்கொணர்வு மனு இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, சாட்சியத்துக்கு அழைக்கப்பட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மன்றில் முன்னிலையாகாததால் வழக்கு செப்டம்பர் 27ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.
மேலும், கோட்டாபய ராஜபக்ஷவை அன்றைய தினம் மன்றில் முன்னிலையாகி சாட்சியமளிக்கும் வகையில் அவருக்கு மீளவும் அறிவித்தல் வழங்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.எஸ்.பீற்றர் போல் உத்தரவிட்டார்.
கருத்து தெரிவிக்க