வெளிநாட்டு செய்திகள்

முத்தலாக் பிரேரணை- மக்களவையில் இன்று மீண்டும் தாக்கல்

இந்திய மக்களவையில் முத்தலாக் பிரேரணை இன்று மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது. ‘முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு பிரேரணை-2019’ என குறித்த பிரேரணைக்கு பெயரிடப்பட்டுள்ளது.

தற்போது அமுலில் இருக்கும் அவசரச் சட்டத்தின் நகலையே பிரேரணையாக மத்திய அரசு முன் வைக்கின்றது.

கணவன்மார்கள், ‘தலாக்’ என்று உடனுக்குடன் 3 தடவை கூறி விவாகரத்து செய்வதை தடை செய்யும் நோக்கில், முத்தலாக் தடை பிரேரணை, பிரதமர் நரேந்திர மோடியின் முந்தைய ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது.

இது மக்களவையில் நிறைவேறியது. எனினும் மாநிலங்களவையில், பா.ஜனதா கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாததால், பிரேரணை நிலுவையில் இருந்தது. சமீபத்தில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால், முத்தலாக் தடை பிரேரணை காலாவதி ஆகியுள்ளது.

இந்நிலையிலேயே மீண்டும் இந்த பிரேரணை தாக்கல் செய்யப்படுகின்றது.

இந்திய மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட பிரேரணை, மக்களவை பதவிக்காலம் நிறைவடையும் பட்சத்தில் செல்லுபடியாகும்.

எனினும் மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, மாநிலங்களவைக்கு அனுப்பப்படும் பிரேரணை, மக்களவை பதவிக்காலம் நிறைவடையும் போது செல்லுபடியாகாது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க