அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் தொகை கடந்த பத்து வருடங்களில் மட்டும் 38 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் வாழும் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் , அமெரிக்காவில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும். கடந்த பத்து ஆண்டுகளில் 38 சத வீதம் அதிகரித்திருப்பதாகவும், மேலும் முறையான ”விசா’ இல்லாது சட்ட விரோதமாக தங்கி இருப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இதேவேளை . அமெரிக்காவில் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 40 சத வீதமாக உயர்ந்துள்ள நிலையில். கடந்த பத்து ஆண்டுகளில் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவிலும். அடுத்ததாக இந்தியர்களும், மூன்றாவது இடத்தில் பாகிஸ்தானியர்களும் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு இருக்கின்றது.
கருத்து தெரிவிக்க