உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

குப்பை மேடாகும் ஹட்டன் நகரம்

ஹட்டன் மற்றும் திக்கோயா பிரதேச மக்களால் கழிவுகளாக வீசப்படும் பொலித்தீன், பிளாஸ்டிக் மற்றும் உக்காத மூலப்பொருட்களை நகருக்கு மத்தியில் ஒன்று சேர்த்து ஹட்டன் நகர சபையினால் தீவைத்து எறிக்கப்பட்டது.
அத்துடன் குப்பைகளை ஒன்றுசேர்க்கும் மத்திய நிலையமாக பிரதான பஸ்தரிப்பிடம் பயன்படுத்தப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஒன்று சேர்ந்துள்ள குப்பையால் வரும் துர்நாற்றம், பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை எறிப்பதனால் வெளியேறும் நச்சுப் புகையினால் நகருக்கு அருகிலுள்ள மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹட்டன் நகருக்கு அன்றாடம் பெரும்பாலான மக்கள் வந்து செல்கின்றனர். நகருக்கு மத்தியில் இவ்வாறு நச்சுப் புகை வெளியாகுவதால் வந்து செல்லும் பொதுமக்கள் அதனை சுவாசிப்பதுடன் பெரும் அசெளகரியங்களையும் எதிர்கொள்கின்றனர்.
அத்துடன் நகர் பகுதி வீடுகளிலுள்ள வயதானவர்கள், சிறுபிள்கைள் என வீடுகளிலுள்ள அனைவரும் விரும்பியோ விரும்பாமலோ இந்த புகையை சுவாசிக்கிற துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க