விளையாட்டு செய்திகள்

புள்ளிப் பட்டியலில் இலங்கை அணி பின்தள்ளப்பட்டது!

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் புள்ளிப் பட்டியலில் இலங்கை அணி ஆறாம் இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற லீக் போட்டி ஒன்றில் பங்களாதேஷ் அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்து.

இந்த வெற்றியின் மூலம் பெறப்பட்ட புள்ளியுடன் மொத்தமாக 5 புள்ளிகளை பெற்றுள்ள பங்களாதேஷ் அணி 5ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இதன்படி, 8 புள்ளிகளைப் பெற்ற அவுஸ்ரேலிய அணி முதலாம் இடத்திலும் 7 புள்ளிகளை பெற்ற நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் முறையே இரண்டாம் மூன்றாம் இடங்களையும் பெற்றுள்ளன.

நான்காம் இடத்தை 6 புள்ளிகளை பெற்ற இங்கிலாந்து அணி பெற்றுக்கொண்டுள்ள நிலையில், மேற்கிந்திய தீவுகள், தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் போன்ற நாடுகள் முறையே எழாம் எட்டாம் ஒன்பதாம் பத்தாம் இடங்களை பெற்றுள்ளன.

கருத்து தெரிவிக்க