உள்நாட்டு செய்திகள்புதியவை

கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்கூட்டம் இன்று கூட்டப்படாது!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்கூட்டம்  இன்று செவ்வாய்க்கிழமை 18ஆம் திகதி கூட்டப்படாது.

நாடாளுமன்றம் இன்று கூட்டவுள்ள நிலையில், அதற்கு முன்னர் கூட்டம் எதுவும் கூடுவதற்கான ஏற்பாடுகள் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பாகவும், இந்திய விஜயம் குறித்தும் பேச குறித்த கூட்டம் நடத்தப்பட விருந்தது.

இதேவேளை, நாடாளுமன்ற குழு கூட்டம் நாளைய தினம் நடத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக தமிழரசு கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க