சினிமா

வெற்றி பெற்ற நாயகியாக கருதவில்லை – ராதிகா ஆப்தே

பொலிவூட் மற்றும் ஹோலிவுட் படங்களில் வலம் வரும் இந்திய நடிகை ராதிகா ஆப்தே, தான் தன்னை ஒரு வெற்றி பெற்ற நாயகியாக கருதவில்லை என தெரிவித்துள்ளார்!

கபாலி, டோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா போன்ற தமிழ் படங்களில் நடித்திருப்பவர் ராதிகா ஆப்தே.

இந்தி மற்றும் ஆங்கில படங்களில் தற்போது நடித்து வருகிறார். பிரிட்டிஷ், அமெரிக்க படமாக உருவான ‘தி வெட்டிங் கெஸ்ட்’ படத்தில் நடித்ததுடன் ‘வேர்ல்ட் வார் 2’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

ஹோலிலிவுட் படங்களில் கால் பதித்து விட்ட போதிலும் தான் நினைத்தபடி இன்னும் வெற்றி எட்டவில்லை என தனது ஆதங்கத்தை வெளியிட்டிருக்கிறார்.

எல்லா மொழிகளிலும் முன்னணி ஹீரோ, ஹீரோயின்களுடன் நடிக்க ஆசைப்படுகிறேன்.

இன்றுவரை நான் என்னை வெற்றி பெற்ற ஹீரோயினாக உணரவில்லை.

என் மனதுக்குள் என்ன நினைத்திருக்கிறேனோ அந்த சாதனையை இன்னும் செய்ய வில்லை. அதற்கான நேரம் வரும்போதுதான் நான் வெற்றி பெற்றதாக உணர்வேன்” என கூறினார்.

கருத்து தெரிவிக்க