உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்து தயாசிறி ‘பகீர்’ தகவல்!

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பின்புலத்தில் வெளிநாட்டு சக்திகள் செயற்பட்டுள்ளன. இவை குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரலாம் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
தாஜ் சமுத்திரா ஹோட்டல்மீது ஏன் தாக்குதல் நடத்தப்படவில்லை? உள்ளே இருந்தவர்கள் யாரென தேடிபார்த்தால் நான் என்ன கூறவருகின்றேன் என்பது தெளிவாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சிங்கள தொலைக்காட்சியொன்றில் நேற்றிரவு ஒளிபரப்பட்ட அரசியல் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” 21/4 தாக்குதல்மீதான பொறுப்பை ஜனாதிபதிமீது திணிப்பதற்கு சிலர் முயற்சிக்கின்றனர்.

கட்டாய விடுமுறையில் அனுப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபரும், பதவி விலகிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் தங்களின் பதவிநிலை மறந்தே கருத்துகளை முன்வைத்தனர்.

பயங்கரவாத தாக்குதல் குறித்து ஏப்ரல் 5 ஆம் திகதியே எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, கடிதத்தை மாத்திரம் அனுப்பிவைத்துவிட்டு பொலிஸ்மா அதிபர் அமைதியாக இருக்கமுடியுமா?

தாக்குதல் அச்சுறுத்தல் இருக்கும்போது அது குறித்து கூடுதல் கவனம் செலுத்தாமல் அப்போதைய பாதுகாப்பு செயலாளர் தியதலாவையில் இருந்தது சரியா?

எல்லாவிடயங்களையும் ஜனாதிபதியை கேட்டா செய்யவேண்டும்? இறுதி யுத்தத்தின் பிரபாகரனை கொல்லும்போது, அவரை உயிருடன் பிடித்துவைத்து, கொல்லவா என மஹிந்தவிடம் வினவினரா?

உயர்பதவியில் இருப்பவர்கள் தமது கடப்பாடு என்னவென்பதை தெரிந்து அதற்கேற்ற வகையில் செயற்படவேண்டும்.

கருத்து தெரிவிக்க