நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று திங்கட்கிழமை 17ஆம் திகதியும் சீரற்ற காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா, மத்திய, சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் முல்லைத்தீவு, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், நாட்டின் பல்வேறு கடற்பரப்புகளிலும் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் கடலையண்டி மற்றும் கடல் தொழிலில் ஈடுபடுபவர்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க