திருநங்கை, வயதான நாடக கலைஞர் வேடம் என வித்தியாசமான வேடங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி தற்போது கதாநாயகியின் தந்தை வேடத்தில் நடிக்க சம்மதித்து உள்ளார்.
தெலுங்கில் தயாராகும் உப்பெனா என்ற படத்தில் நாயகியாக நடிக்கும் கீர்த்தி ஷெட்டியின் தந்தையாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளார்.
இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் சகோதரர் வைஷ்ணவ் தேஜ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். படத்தில் வில்லனும் விஜய் சேதுபதி தான்.
விஜய் சேதுபதி தமிழ் பட உலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். அலட்டிக்கொள்ளாமல் அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார் என குறிப்பிடப்படுகிறது.
கருத்து தெரிவிக்க