சில பெண்கள் அழகாக இருந்தாலும் கால் பாதங்களில் கருமையும் , பித்த வெடிப்புகளும் இருக்கும் . இதனை போக்குவதற்கு சில எளிய வழிகளைப் பின்பற்றினாலே போதுமானது .
கிழமையில் ஒரு தரமாவது நகங்களை வெட்டி பாதங்களை சுத்தம் செய்தல் வேண்டும் . நகத்தின் விளிம்புகளை ஊசியால் சுத்தம் செய்யக் கூடாது . மென்மையான பருத்தித் துணி ஒன்றை இளஞ்சூடான நீரில் நனைத்து , நகங்களையும் பாதங்களையும் சுத்தப்படுத்தலாம் .
இரவில் இளஞ் சூடான நீரில் பாதங்களை பத்து நிமிடங்கள் வைத்திருக்கவும் . அதனால் பாதங்களில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதுடன் புத்துணர்வும் தரும் . பாகங்களும் மென்மையுறும் .
மென்மையான தோலில் தயாரிக்கப்பட்ட பாதணிகளை அணிவது மிகவும் நல்லது .
பாதத்தில் புண் அல்லது வெடிப்புக்கள் ஏற்பட்டால் மருதாணி இலையை பசை போல் அரைத்து , வெடிப்பு உள்ள இடங்களில் தடவி வந்தால் குணமாகும் .
கால் விரல் நகரங்களின் ஓரத்தில் கல் , மண் புகுந்து விட்டால் சிறு துணியைத் திரி போல் ஆக்கி அதனை நல்லெண்ணெயில் தோய்த்து , விளக்கில் சூடாக்கி மிதமான சூட்டோடு நகத்தின் ஓரத்தில் தடவவும் . அழுக்கு தானாய் வந்து விடும் .
இரவில் படுக்கப் போகும் முன் இளஞ் சூடான நீரினுள் உப்பு , எலுமிச்சைச் சாறு கலந்து , அதனுள் பத்து நிமிடங்கள் பாதங்களை வைத்து இருக்கவும் . பின் மெல்லிய பருத்தி துணியால் துடைத்து விடவும் . இதனால் பாதங்கள் மென்மை அடைவதுடன் நல்ல உறக்கமும் வரும் .
கருத்து தெரிவிக்க