உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இலங்கையின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்:தமிழகத்தில் நான்கு பேர் விசாரணைக்கு அழைப்பு

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு பேரை விசாரணைக்கு வருமாறு இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த வாரம் தமிழகம்,கோயம்புத்தூரில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது அஸாருதீன் என்பவரும் மேலும் இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.

இதன்போது குறித்த பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து சுமார் 29 கைத்தொலைபேசிகள் உட்பட்ட பல பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

இதில் அஸாருதீன் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து இளைஞர்களை திரட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில், பரூஸ் கான், முப்ஹீன், உமர் பாரூக் மற்றும் ஜனாபர் அலி ஆகியோரை எதிர்வரும் வெள்ளிக்கிழமை கொச்சியில் உள்ள தமது அலுவலகத்துக்கு விசாரணையின் நிமித்தம் பிரசன்னமாகுமாறு இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு அழைத்துள்ளது.

கருத்து தெரிவிக்க