அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள சைபர் பாதுகாப்பு சட்டமூலத்தின் ஊடாக மக்களின் பதிவு உரிமை இல்லாமல் போவதாக வலையமைப்பு சுதந்திரத்தைப் பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்தவர்களது வலையமைப்பு கணக்குகள் முடக்கப்பட்டு நிறுத்தப்பட்டன. தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருகையில் WI-FI இலவசம் எனக் கூறியது. இப்போது காசு கொடுத்தாலும் முடியாமல் உள்ளது. இப்போது பாதுகாப்பு சட்டமூலம் ஒன்றை கொண்டுவர திட்டமிடுகிறது. வலையமைப்பை பாதுகாப்பதற்காக இந்த சட்டமூலம் கொண்டுவரப்படுகிறது எனக் கூறியதற்கு அதனை ஆராய்ந்தால் அது வலையமைப்பை இல்லாமல் செய்வதற்கே கொண்டுவரப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க