இந்தியா

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் சண்டை.. தீவிரவாதி சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் பாதுகாப்பு படையினர் அடையாளம் தெரியாத தீவிரவாதியை சுட்டுக் கொன்றனர்.

2016ம் ஆண்டு ஜூலை மாதம் தீவிரவாதி புர்ஹான் வானி கொல்லப்பட்ட பின்னர் தீவிரவாதிகள் கோட்டையாக தெற்கு காஷ்மீர் மாவட்டங்கள் உருவெடுத்துள்ளன. புல்வாமா, குல்கம், ஷோபியன் மற்றும் அனந்த்நாக் பகுதிகளில் இந்த மாதத்தில் தீவிரவாதிகளின் ஊடுருவல்கள் மற்றும் அத்துமீறல்கள் அதிகமாகி உள்ளது. இந்த மாதத்தில் இதுவரை ஒரு 13க்குமேற்பட்ட துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது. இதில் சுமார் 30 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா பகுதியில் உள்ள சேவா உளா என்ற இடத்தில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள், அங்குவந்த பாதுகாப்பு படையினரை தாக்கினர். இருதரப்புக்கும் இடையே சண்டை நடந்தது. இதில் அடையாளம் தெரியாத தீவிரவாதியை பாதுகாப்பு படையனர் சுட்டுக் கொன்றனர்

தீவிரவாதிகள் பதுங்கி உள்ளார்களா என பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு 2 தீவிரவாதிகள் இதே பகுதியில் பாதுகாப்பு படையினருடன் நடந்த சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த சண்டையில் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்.

கருத்து தெரிவிக்க