ஓமான் வளைகுடாப் பகுதியில் 2 எண்ணெய்க் கப்பல்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு ஈரானே காரணம் என அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பொம்பியோ குற்றம் சுமத்தியுள்ளார்.
நோர்வேக்குச் சொந்தமான ஃபுரொன்ட் அல்ரயர் கப்பல் ஒன்றும் ஜப்பானின் (Kokuka Sangyo ) நிறுவனத்துக்குச் சொந்தமான கப்பல் ஒன்றும் தாக்குதலினால் நேற்று தீப்பிடித்து எரிந்துள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
புலனாய்வுத் தகவல்கள், தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட விதம் ஆகியவற்றின் அடிப்படையில் இதனை கூறுகின்றோம்.
பதற்றத்தை அதிகரிக்கும் நோக்கில் ஈரான் அந்தக் கப்பல்களைத் தாக்கி சேதப்படுத்தியுள்ளது.
அந்தச் சம்பவம் அனைத்துலக அமைதிக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக விளங்குவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்குள்ளான கப்பல்களில் இருந்து 44 பணியாளர்கள் மீட்கப்பட்டதாக ஈரான் செய்திகள் தெரிவிக்கின்றன
ஈரான்-அமெரிக்கா இடையிலான மோதல் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க