பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இந்த வருடத்துக்குள் சீன ஜனாதிபதி ஜி ஜிங்பிங் இந்தியா வருவார் என்று இந்திய மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
தஜிகிஸ்தான் நாட்டின் பிஷ்கெக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, சீனா தலைவர்கள் தமது குழுவுடன் பங்கேற்றுள்ள நிலையில் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து கொண்டனர்.
இதன் போது, இந்தியா வருமாறு சீன ஜனாதிபதிக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
இதனை ஏற்று இந்தியா வருவதாக ஜிங்பிங் தெரிவித்திருக்கிறார். இந்த தகவலை மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் ஏப்ரலில் உகானில் மோடியும், ஜிங்பிங்கும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க