உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவிளையாட்டு செய்திகள்

உலக கிண்ணம் இன்று இங்கிலாந்தும்- மேற்கிந்தியாவும் மோதல்

உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதுகின்றன.

இது போட்டித்தொடரின் 19-வது லீக் ஆட்டமாகும்.

ஏற்கனவே இங்கிலாந்து அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் 104 ஓட்ட வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்தது.

2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 14 ஓட்ட வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

மற்றும் ஒரு ஆட்டத்தில் பங்காளதேஸை வெற்றிகொண்டது.

மேற்கிந்தியதீவுகள் அணி முதல் ஆட்டத்தில் 7 விக்கெட்டால்; பாகிஸ்தானை வெற்றிகொண்டது.

அடுத்த ஆட்டத்தில் 15 ஓட்ட வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம தோற்று போனது.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம் மழை காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டது.

இதேவேளை இன்றைய ஆட்டமும் மழையால்; மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க