உலகம்

பெர்லின் நகரில் உலகப் போரில் உயிர் தப்பிய முதலை மரணம்!

பெர்லினில் இரண்டாவது உலகப் போரில் உயிர் தப்பிய, நாஜித் தலைவர் அடொல்ப் ஹிட்லருக்கு சொந்தமானது என நம்பப்பட்டு வந்த முதலை ஒன்று மொஸ்கோ மிருகக்காட்சி சாலையில் உயிரிழந்துள்ளது.

84 வயதுடைய மிசிசிப்பி முதலையான சார்டன் , நேற்றுக்காலை வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்தது என அந்த மிருகக்காட்சி சாலை அறிவித்தது.

அமெரிக்க மிருகக்காட்சி சாலையில் பிறந்த சார்டன், 1936 ஆம் ஆண்டு பெர்லின் மிருகக்காட்சி சாலைக்கு வழங்கப்பட்டது.

1943 ஆம் ஆண்டு குண்டு வீச்சின் போது மிருகக்காட்சி சாலையில் இருந்து தப்பியது. மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் பிரிட்டனின் துருப்புகளால் கண்டு பிடிக்கப்பட்டு அந்த முதலை சோவியத் ஒன்றியத்திடம் வழங்கப்பட்டது.

கருத்து தெரிவிக்க