வெளிநாட்டு செய்திகள்

திருத்தங்களுடன் தாக்கல் செய்யப்படவுள்ளது முத்தலாக் சட்டம்

முத்தலாக் தடை சட்டத்தை மீண்டும் நாடாளுமன்றத்தில் திருத்தங்களுடன் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மூன்று முறை தலாக் கூறி  விவாகரத்து செய்யும் குறித்த முறையை ரத்து செய்வதற்கான புதிய சட்டத்திருத்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, கடந்த பெப்ரவரி மாதம் வெளியிட்ட அரசாணையை ரத்து செய் து புதிய சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது.

முஸ்லீம் பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக கொண்டு வரப்பட்ட இச்சட்ட மசோதா கடந்த மக்களவையில் நிறைவேறிய போதும் மாநிலங்களவையால் நிராகரிக்கப்பட்டது.

இதனையடுத்து கடந்த பெப்ரவரி மாதம் இது, அவசர சட்டமாக நிறைவேற்றப்பட்டது.

கருத்து தெரிவிக்க