உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

தௌஹீத் ஜமாவின் இராணுவ பொறுப்பாளர் இலங்கைக்கு அழைத்து வரப்படுகிறார்.

தற்கொலைதாரி ஸஹ்ரானை தலைவராக கொண்ட தௌஹீத் ஜமா அமைப்பின் இராணுவப் பொறுப்பாளர் என்று கருதப்படுபவரை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதற்காக சிறப்பு குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தற்போது சவூதிக்கு சென்றுள்ளனர்.

மொஹமட் மிஹ்லான் என்ற அபு சீலன் என்ற புனைப்பெயரைக் கொண்டவரே இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளார்.

2018ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் திகதி மட்டக்களப்பு வவுணத்தீவில் இரண்டு காவல்துறையினர் கொல்லப்பட்டமைக்கு இவரே பொறுப்பானவராக செயற்பட்டுள்ளார்.

ஸஹ்ரான் மற்றும் அவரின் குழுவினர் இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று தாக்குதல்களை நடத்தியபோது மிஹ்லான் மக்கா யாத்திரைக்கு சென்றிருந்தார்.

இந்தநிலையில் அங்கிருந்து ஏப்ரல் 30 ஆம் திகதி திரும்பியதும் இரண்டாவது தற்கொலை தாக்குதலை நடத்துவதற்கு அவர் திட்டமிட்டிருந்தார்.

எனினும் இலங்கைக்கு வருவதற்காக சவூதி வானூர்தி தளத்துக்கு சென்ற அவர் வானூர்தியில் ஏறவில்லை. இந்தநிலையில் சந்தேகம் கொண்ட சவூதி அதிகாரிகள் அவரை கைதுசெய்தனர்.

இந்தநிலையில் சவூதியுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்பாடு ஒன்றின்கீழ் அவர் இலங்கைக்கு அழைத்துவரப்படவுள்ளார்.

கருத்து தெரிவிக்க