குற்றம் சாட்டப்பட்டவர்களை சீனாவிற்கு அனுப்பாது ஹொங்கோங் எல்லைக்குள் விசாரிக்கவேண்டும் என அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
எனினும் இந்த சந்தேகநபர்களை சீனாவிற்கு அனுப்பி விசாரணைகள் மேற்கொள்ளும் திட்டத்தை அமல்படுத்துவதில் ஹொங்கோங் நிர்வாகத்தலைவர் கேரி லாம் உறுதியாக உள்ளார்.
ஹொங்கோங் நாடாளுமன்றத்தில், கைதிகள் பரிமாற்ற சட்டத்திருத்த மசோதா மீது நேற்று விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில்,போராட்டக்குழு அரசு அலுவலகங்களுக்கு செல்லும் அனைத்து வீதிகளையும் மறித்து, இயங்கவிடாமல் முடக்கியதோடு பேரணியாக சென்று நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயற்சித்தனர்.
அதனை தொடர்ந்து, தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை பொலிஸார் வெளியேற்றியுள்ளனர்.
10 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த போராட்டத்தில் பங்கேற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்து தெரிவிக்க