சினிமா

ஜோதிகா ஒரு ராட்சசி – இயக்குநர் சை.கௌதம்ராஜ்

ஜோதிகா ஒரு நடிப்பு ராட்சசி என ராட்சசி என்ற புதிய படத்தை இயக்கும் புதுமுக இயக்குநர் சை.கௌதம்ராஜ் புகழாரம் சூட்டியுள்ளார்.

புதுமுக இயக்குநராக அறிமுகமாவது குறித்தும் ஜோதிகாவை வைத்து இயக்குவது குறித்தும் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜோதிகாவை தவிர வேற யாரும் இவ்வளவு கச்சிதமா ராட்சசிய பண்ணிரமுடியாது. அது படம் பாக்கும் போது ரசிகர்களுக்கு தெரியும் என கூறியுள்ளார்.

மேலும், ஒரு கதையை தேர்ந்தெடுக்கும் போதும், அதை நடிக்கும் போதும் தனக்கு சமுதாயத்துல பொறுப்புணர்வு இருக்குன்னு முழுமையா ஜோதிகா நம்புறாங்க, அவங்க எப்பவும் ஜெயிச்சிட்டே தான் இருப்பாங்க எனவும் அவர் தெரிவித்தார்.

ராட்சசி கதைய கேட்டதுல இருந்து நிறைய பயிற்சி பண்ணாங்க, நிறைய டீச்சர் கிட்ட பேசுனாங்க. அவங்க ட்ரஸ்ஸிங், மேக்கப் சேஞ்ச், பொடிலேங்குவேஜ்னு அவ்வளவு டெடிகேசன் செய்தாங்க, என இயக்குநர் சை.கௌதம்ராஜ் புகழாரம் சூடினார்.

கருத்து தெரிவிக்க