கடந்த ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலைக்குண்டுத் தாக்குதலை நடாத்தி பொது மக்களை கொலை செய்த பயங்கரவாதியான அசாத் என்பரின் உடற் பாகங்களை எக்காரணம் கொண்டு காத்தான்குடியில் அடக்கம் செய்வதற்கு காத்தான்குடி நகர சபை அனுமதி வழங்குவதில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மட்டக்களப்பு காத்தான்குடி நகர சபையின் விஷேட அமர்வு இன்று (12.06.2019) புதன்கிழமை நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தலைமையில் நடைபெற்றது.
இதன்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் உள்ளுராட்சி திணைக்கத்தினால் அரபு வசனங்களை அகற்ற வேண்டும் என்ற அறிவுறுத்தல் கடிதத்தின் படி அரபு வசனங்கள் பொறிக்கப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றுவதால் ஏற்படும் செலவுகள் தொடர்பாக உள்ளுராட்சி திணைக்களத்திடம் எழுத்து மூலம் அறிவுறுத்தல்களை பெற்றுக் கொள்வது என இதன்போது முடிவெடுக்கப்பட்டது
மட்டக்களப்பு மாநகர சபையினால் காத்தான்குடி நுழைவாயில் வரவேற்பு வளைவில் எழுதப்பட்டுள்ள அரபு வசனத்தை அகற்ற வேண்டும் என்பது தொடர்பாக காத்தான்குடி நகர சபை தீர்மானிக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.
(இதேவேளை தற்கொலைக்குண்டுதாரியின் உடலை மட்-புதுநகர் ஆலையடிச்சோலை மயானத்தில் அடக்கம் செய்வதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது)
கருத்து தெரிவிக்க