உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

சிறுவர் உரிமை மீறல் தொடல் வருடத்திற்கு 9000 முறைப்பாடுகள்!

சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச தினமாக இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

“சிறுவர் தொழிலை நிறுத்துவோம், அவர்களது கனவை நனவாக்குவோம்” என்ற தொனிப்பொருளில் இம்முறை சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

எந்தவொரு சமூகத்திற்கும் உயிர்நாடியாக திகழ்வது குழந்தைகளாகும்.

அதனால் அவர்களது எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு அடிப்படையாக அமைவது கல்வி அறிவாகும்.

அனைத்து குழந்தைகளுக்கும் தேவையான அடிப்படை பாடசாலை கல்வியைக் கொடுக்க வேண்டியது கட்டாயமாகும். சிறுவர்களது கனவை நனவாக்க நாட்டிலுள்ள அனைவரும் ஒருமித்து கைகோர்க்க வேண்டுமென்பது ஒரு முக்கிய பொறுப்பாகும்.

சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் விசே நிகழ்ச்சித் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் அறிமுக நிகழ்வு கடந்த 5ம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் பணிப்பாளர் சட்டத்தரணி எச்.எம். அபேரத்னவினால் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை சிறுவர் பாதுகாப்பு தொலைபேசி பாதுகாப்பு இலக்கமான 1929இல் வருடம் தோறும் 9000 முறைப்பாடுகள் அதிகாரச் சபைக்கு கிடைப்பதாகவும் அவற்றில் 1500 முறைப்பாடுகள் கல்வி ஒழுங்கு விதிகளை மீறியமை தொடர்பானவை என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான முறைப்பாடுகளை குறைத்துக் கொள்வதற்காகவே இந்த நிகழ்ச்சித் திட்டத்தை நாடுமுழுவதிலும் மமுன்னெடுக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க