இங்கிலாந்தில் இடம்பெற்று வரும் உலக கிண்ண கிரிக்கட் போட்டிகளில் மழைக்காரணமாக பல ஆட்டங்கள் கைவிடப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் இதற்காக புள்ளிகள் எவ்வாறு அணிகளுக்கு வழங்கப்படுகின்றன என்பது தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
அரைஇறுதி வாய்ப்புக்குரிய அணிகள் ஒரே புள்ளிகளை பெற்று சமநிலையில் இருந்தால் லீக் சுற்றில் யார் அதிக வெற்றி பெற்று இருக்கிறார்கள் என்று பார்க்கப்படும்.
அதிலும் சமநிலை நீடித்தால் ஓட்ட விகிதம்; கணக்கிட்டு முன்னுரிமை வழங்கப்படும்.
அதுவும் சமனாக இருக்கும் பட்சத்தில், அந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரில் யார் அதிக வெற்றி பெற்றுள்ளது என்று பார்க்கப்படும்.
சிலவேளை இந்த மூன்று அம்சங்களிலும் ஒரே மாதிரி சமனாக இருந்தால்,
உலக கிண்ண போட்டிக்கு முன்பாக தரவரிசையில் யார் முன்னிலை பெற்றிருந்தார்கள் என்பதன் அடிப்படையில் அரைஇறுதி அணிகள் தேர்வாகும்.
இறுதிப்போட்டியிலும் மழை பெய்தால் வெற்றிக்கிண்ணம் பகிர்ந்தளிக்கப்படும்.
கருத்து தெரிவிக்க