உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்பண்பாடுபுதியவை

சர்வதேச யோக தினம் கொழும்பில்-இந்திய உயர் ஸ்தானிகராலயம்

ஒவ்வொரு வருடமும் ஜூன் 21 ஆம் திகதியை ‘சர்வதேச யோகா தினமாக’ அனுசரித்து பிரகடனப்படுத்துவதற்கு இந்தியாவினால் முன்னெடுக்கப்பட்ட தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஏற்றுக் கொண்டது.

ஆயுர்வேதத்தைப் போன்று யோகா, இந்தியா மற்றும் இலங்கைக்கிடையில் பகிர்ந்து கொள்ளும் ஒரு பாரம்பரியத்தின் ஓர் அங்கமாக அமைகிறது.

2015 இலிருந்து, சர்வதேச யோகா தினம் ஆயிரத்திற்கு மேற்பட்ட யோகா ஆர்வங் கொண்டவர்களின் பங்குபற்றுதலுடன் இலங்கையில் நாடு முழுவதிலுமாக  அனுசரிக்கப்பட்டு வருகின்றது.

இந்த வருடம், 5 ஆவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கொழும்பு சுதந்திர சதுக்கப் பூங்காவில் ஜூன் 15 ஆம் திகதி, சனிக்கிழமை, காலை 6 மணியிலிருந்து ஒரு மாபெரும் யோகா பொது நிகழ்வு நடைபெறும்.

யோகா, பிரணயாமம், மற்றும் தியானம் என்பவற்றின் ஒரு மீள்யெவனப்படுத்தும் இந்த நிகழ்வுக்கு அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

நிகழ்விற்கு அனுமதி இலவசம். தயவு செய்து யோகா பாய்களை (Yoga Mats) உங்களுடன் எடுத்து வரவும். அனைவருக்கும் பங்குபற்றுதலுக்கான சான்றிதழ் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தினால் வழங்கப்படும். iccrcolombo2@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் தயவு செய்து உங்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.

மேலதிக விபரங்களுக்கு தயவு செய்து ஸ்வாமி விவேகானந்த கலாசார நிலையத்தை 0112684698 எனும் தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.

இந்திய உயர் ஸ்தானிகராலயம்
கொழும்பு

கருத்து தெரிவிக்க