அழகு / ஆரோக்கியம்

ஆவாரம் பூவில் உள்ள மருத்துவ குணங்கள்

இன்று பெரும்பான்மையான மக்கள் நீரழிவு நோயால் பாதிக்கப்படுவது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தும் குணங்கள் அடங்கியது ஆவாரம் பூ. அது மட்டுமன்றி பல்வேறு நோய்களுக்கும் அருமருந்தாக நிகழ்கின்றது . பலவித நோய்களுக்கு நிவாரணியாக நம் கண் முன்னே காணப்படுகின்ற ஆவார மரத்தை யாரும் பொருட்படுத்துவதில்லை . இதன் இலை , பூ , காய் , பட்டை , வேர் என்ற அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது . ” ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ ” என்ற பழமொழியும் ஒன்றுண்டு . இத்தாவரம் கடுமையான வறட்சியில் கூட வளரக் கூடியது .

மலச்சிக்கலுக்கு ஆவாரம் பூவை அவித்து வடித்து பருகி வரவும். சருமத்தில் ஏற்படும் நுண்ணுயிர் தொற்றுக்களை அகற்றுவதற்கு ஆவாரம் பூவை அரைத்து பூசி குளித்து வர வேண்டும் . சிறு நீர் பாதையில் ஏற்படும் தொற்றுகள் , வயிற்றோட்டம் , காய்ச்சல் போன்றவற்றுக்கும் ஆவாரம் பூ தேநீரை அருந்தி வந்தால் குணமாகும் .

நீரழிவு நோய்க்கு ஆவாரம் பூ , இலை , பட்டை சிறந்த மருந்தாகும் . இவற்றில் ஏதாவது ஒன்றை அவித்து குடித்தால் நீரழிவு நோய் கட்டுப்படும் .

ஆவாரம் பூ , இலை , காய் , பட்டை , வேர் போன்றவற்றை காய வைத்து பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளவும் . தேவையான நேரங்களில் பயன்படுத்தலாம் . இதன் காயையோ வேரையோ அவித்து அதன் நீரைப் பருகி வந்தால் மாதவிடாய் பிரச்சனை . அதிக உதிரப்போக்கு , வெள்ளை படுதல் , குடற்புண் , வயிற்றுப்புண் , உடற் சூடு . பித்தம் போன்ற பிரச்சனைகள் அறவே நீங்கும்.

கருத்து தெரிவிக்க