இலங்கையில் முச்சக்கர வண்டிகளின் கட்டணங்கள் இன்று முதல் 10 ரூபாவால் அதிகரிக்கப்படுகின்றன.
இதன்படி கட்டணமானியில் ஆரம்பக்கட்டணத்தொகை 60 ரூபாவாக மாற்றப்படுகிறது.
இதுவரைக்காலமும் இது 50ரூபாவாக இருந்தது.
பெற்றோலின் விலை அண்மையில் அதிகரிக்கப்பட்டமையை அடுத்தே இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை வீதி ஒழுங்குகளை மீறினால் 25ஆயிரம் ரூபா அபராதம் என்ற நடைமுறை வரும்பட்சத்தில் நாடளாவிய சேவைப்புறக்கணிப்பை நடத்தப்போவதாக தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் எச்சரித்துள்ளது.
சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
கருத்து தெரிவிக்க