அமெரிக்க மோட்டார் சைக்கிளுக்கு இந்தியா 50 சதவீத வரி விதிப்பதை ஏற்கவே முடியாது என்று அமரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான இருதரப்பு உறவு சிறப்பாக உள்ளது.
குறிப்பாக இராணுவ உறவு நன்றாக இருக்கிறது. ஆனால் வர்த்தக உறவு திருப்தியளிக்கவில்லை என்ற ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி குற்றம் சுமத்தியுள்ளார்.
அமெரிக்காவின் ஹோர்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளுக்கு இந்தியா 100 சதவீத வரி விதித்தது.
எனினும் இந்திய மோட்டார் சைக்கிளுக்கு அமரிக்கா வரிவிதிப்பதில்லை. இந்தநிலையில் தமது மோட்டார் சைக்கிள்களுக்கு வரிவிதிக்கக்கூடாது என்று கோரிக்கையை பரிசீலிப்பதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க