அமைச்சரவைக் கூட்டங்களை நடத்த ஜனாதிபதி மறுப்பாராக இருந்தால் அல்லது அமைச்சரவைக்கூட்டங்கள் இடம்பெறாவிட்டால் அரசாங்கம் ஒன்று இல்லையென்றே அர்த்தம்.
இந்த கருத்தை பொதுஜனபெரமுனவின் தலைவர் முன்னாள் அமைச்சர் ஜிஎல் பீரிஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு தமக்கு எதிரான நடவடிக்கையை நிறுத்தும்வரை அமைச்சரவைக் கூட்டங்களை நடத்தமுடியாது என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.
இதன்படி நேற்று அமைச்சரவைக்கூட்டம் நடத்தப்படவில்லை.
எனவே உடனடியாக பொதுத்தேர்தல் ஒன்றுக்கு செல்வதே சிறந்த நடவடிக்கையாக இருக்கும் என்றும் ஜிஎல் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க