இந்தியா

100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்துக- ராஜஸ்தான் முதல்வர்

ஜெய்ப்பூர்: 100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாட்களுக்கு உயர்த்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கடிதம் எழுதியுள்ளார்.

இதே கோரிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கடந்த மாதமே முன்வைத்து விரிவான புள்ளி விவரங்களுடன் கூடிய அறிக்கை வெளியிட்டிருந்தார்.
ராமதாஸ் முன்வைத்த கோரிக்கையை போலவே ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டும் இதே வேண்டுகோளை பிரதமரிடம் முன் வைத்திருக்கிறார்.

100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளதாகவும், இது காலத்தின் தேவை எனவும் அசோக் கெலாட் சுட்டிக்காட்டியுள்ளார். கிராமப்புற பகுதிகளில் குடும்பத்தில் ஒருவருக்கு ஆண்டுக்கு 100 நாள் வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்கில்முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்தது.

இதனிடையே தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 100 நாட்கள் வழங்கப்படும் வேலையை இனி 200 நாட்களாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையில், 100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாட்களுக்கு உயர்த்த வேண்டும் என மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த கோரிக்கையை மத்திய அரசிடம் மாநில அரசும் வைக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

கருத்து தெரிவிக்க