இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் தேசியவாதிகள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மோடி இலங்கைக்கு விஜயம் செய்தவேளையில் மஹிந்த ராஜபக்சவையும் சந்தித்தார்.
இதன்போது இரண்டு தலைவர்களும் பயங்கரவாதத்தை பிராந்தியத்தி;ல் இருந்து அகற்றுவது தொடர்பில் உரையாடினர்.
அவர்கள் இருவரும் பயங்கரவாதத்தை ஒழிக்கும் செயற்பாட்டில் அர்ப்பணிப்பை செய்தவர்கள் என்றும் நாமல் ராஜபக்ச தமது கருத்துப்பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்
நரேந்திர மோடியின் இலங்கை பயணம் அரசாங்கத்துக்கு மாத்திரம் நன்மை பயக்கவில்லை.
இலங்கையை பாதுகாப்பான நாடு என்பதை உலகுக்கு அறியச்செய்தது.
உயிர்த்த ஞாயிறுத்தாக்குதலின் பின்னர் இலங்கைக்கு முதலில் வந்த சர்வதேச தலைவர் மோடியாவார்.
இதன்மூலம் சர்வதேசத்தில் இலங்கையின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனை தக்கவைத்துக்கொள்ள இலங்கையர்கள் மத்தியில் ஒற்றுமை அவசியம்.
எனவே இலங்கையை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்று நாமல் ராஜபக்ச கோரியுள்ளார்.
கருத்து தெரிவிக்க