உலகம்

ஆபத்தான கட்டத்தில் உலகம் : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

உலகம் புதிய மற்றும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர், டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று உலகம் முழுவதும் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. இந்த கொடிய தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்காக , அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு பொருளாதார சீரழிவுகளை ஏற்படுத்தியதால் , பல்வேறு நாடுகள் ஊரடங்கை தளர்த்தி வரும் நிலையில், கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என தெரிவித்தார்.

மேலும், நோய் தொற்று அதிகரித்த வண்ணம் இருந்தாலும் மக்கள் பெரும்பாலும் ஊரடங்கால் சோர்வடைந்து விட்டனர். இதன் காரணமாக உலகம் ஆபத்தான கட்டத்தை நோக்கி நகர்வதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், உலகளவில் அகதிகள் தான் இந்த கொரோனாவாலும் அதன் காரணமாக போடப்பட்ட ஊரடங்காலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க